மாணவர்களுக்கு குட் நியூஸ்.. வழக்குகள் ரத்து: தமிழக அரசு அதிரடி உத்தரவு..!
மாணவர்களுக்கு குட் நியூஸ்.. வழக்குகள் ரத்து: தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

கொரோனா தொற்று பரவல் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு கடந்த செமஸ்டர் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. இந்நிலையில், கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடைபெற உள்ளது.
ஆனால், நடப்பு செமஸ்டர் தேர்வுகளையும் ஆன்லைனில் நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் தமிழக அரசின் உயர்கல்வித்துறை, நேரடி முறையில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்தது.
இதையடுத்து, கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்த கோரி தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் மீது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தவறான கருத்துகளை பதிவிடும் முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அந்த வகையில், ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த வேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மீது, மதுரையில் 9 வழக்குகள், கள்ளக்குறிச்சி மாவட்டம், சென்னை மற்றும் திருச்சியில் தலா ஒன்று என மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, அந்த வழக்குகள் அனைத்தையும் கைவிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில், அந்த 12 வழக்குகளிலும் தமிழ்நாடு காவல் துறையினரால் மேற்கொள்ளப்படவிருந்த மேல் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

