Theme Check

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. கட்டணம் இல்லாமல் டிகிரி படிக்கலாம்..!

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. கட்டணம் இல்லாமல் டிகிரி படிக்கலாம்..!

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. கட்டணம் இல்லாமல் டிகிரி படிக்கலாம்..!
X

சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகள் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் 2022 - 2023 கல்வியாண்டின் இலவச இளங்கலை படிப்புகளில் மாணவர்கள் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில், சென்னை பல்கலைக்கழகம் கடந்த 2010-ம் ஆண்டு முதல் ‘சென்னை பல்கலைக்கழக இலவசக் கல்வி திட்டம்’ என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் நடப்பு கல்வி ஆண்டில் (2022 - 2023) இணைப்பு கல்லூரிகளில் (அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் சுயநிதி கல்லூரிகள்) சேர பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் http://unom.ac.in என்ற இணையத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், குடும்பத்தில் பட்டப் படிப்புக்கு வரும் முதல் தலைமுறை மாணவர்கள் ஆகியோருக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.

எனவே, தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் இதில் இணைந்து பயன்பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story
Share it