Theme Check

மாணவர்களுக்கு குட்நியூஸ்.. வரும் 6 முதல் 23ம் தேதி வரை இலவசம்..!

மாணவர்களுக்கு குட்நியூஸ்.. வரும் 6 முதல் 23ம் தேதி வரை இலவசம்..!

மாணவர்களுக்கு குட்நியூஸ்.. வரும் 6 முதல் 23ம் தேதி வரை இலவசம்..!
X

சென்னையில் வரும் ஜனவரி 6ம் தேதி முதல் 23ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளதாக பபாசி அறிவித்துள்ளது.

தமிழகத்தின் மிகப்பெரும் புத்தக விழாவாக சென்னை புத்தக கண்காட்சி இருந்து வருகிறது. இங்கு, அனைத்து புகழ்பெற்ற நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பாளர்கள், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடும் இலக்கியம், கலை, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், வரலாறு, பொது அறிவு, விளையாட்டு, உணவு, உடல் நலம் போன்ற பல பிரிவுகளுக்கான புத்தகங்கள் கிடைக்கும்.

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடைபெறும் இந்த கண்காட்சி இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரியில் நடந்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான புத்தக கண்காட்சி வரும் ஜனவரி மாதம் 6ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த புத்தக கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடைபெறும். வழக்கம்போல மாணவர்களுக்கு அனுமதி இலவசம். மற்றவர்களுக்கு நுழைவு கட்டணம் 10 ரூபாய் என, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் எனும் பபாசி அறிவித்துள்ளது.

Next Story
Share it