மாற்றுத் திறனாளிகளுக்கு குட் நியூஸ்.. வயது வரம்பு 60 ஆக அதிகரிப்பு..!
மாற்றுத் திறனாளிகளுக்கு குட் நியூஸ்.. வயது வரம்பு 60 ஆக அதிகரிப்பு..!

மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் தாய்க்கு இலவச மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளின் அதிகபட்ச வயது வரம்பு 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், கை, கால் பாதிக்கப்பட்ட, காது கேளாத மாற்றுத்திறனாளிகளுடன், மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள்.
75 சதவீதத்துக்கு மேல் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளின் தாய்க்கு இலவச மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற, தையல் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற வயது வரம்பு 18 முதல் 45-க்குள் இருக்க வேண்டும். பயனாளிகளின் பதிவு மூப்பு அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்பது விதி.
இந்தத் திட்டத்தில், அதிக அளவில் பயனாளிகள் பயன் பெற வசதியாக பயனாளிகளுக்கான வயது வரம்பு 18 முதல் 45 என்பதை, 18 முதல் 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் லால்வேனா பிறப்பித்துள்ளார்.

