Theme Check

பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. அரசு செய்திகள் அனைத்தும் இனி வலைதளங்களில்..!

பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. அரசு செய்திகள் அனைத்தும் இனி வலைதளங்களில்..!

பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. அரசு செய்திகள் அனைத்தும் இனி வலைதளங்களில்..!
X

அரசின் அன்றாட நிகழ்வுகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வசதியாக, அரசு செய்திகள் அனைத்தும் இனி சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகிறது என்று, செய்தி மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வரின் அறிவிப்புகள், அரசின் திட்டங்கள், சாதனைகள், அரசு சார்ந்த செய்திகள், புகைப்படங்கள், வீடியோ பதிவுகள், அரசாணைகள் அனைத்தும் ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம், யூ-டியூப் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

அத்துடன், சட்டசபை நிகழ்ச்சிகள் மற்றும் முதல்வர் பங்கேற்கும் முக்கிய நிகழ்ச்சிகள், சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

எனவே, செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் 'tndipr' என்ற பெயரில் துவக்கப்பட்டுள்ள சமூக வலைதள பக்கங்களை பொதுமக்கள் பின் தொடர்ந்து, அரசின் அன்றாட நிகழ்வுகளை அறிந்து பயன் பெறலாம் என, செய்தி மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.

Next Story
Share it