திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!!
திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!!

திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட இருக்கிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏழுமலையானை வழிபடுவதற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆகியவை ஆன்லைன் மூலம் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன.
இதனால் இணையதள சேவை குறைவான வேகத்தில் இருக்கும் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பக்தர்கள், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இயலாத நிலையில் இருக்கும் பக்தர்கள் ஏழுமலையானை வழிபட இயலாத நிலை ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் வரும் 16ஆம் தேதி முதல் ஏழுமலையானை வழிபடும் வகையில் நாளை 15 ஆம் தேதி காலை 9 மணி மணி முதல் நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் என்ற எண்ணிக்கையில் திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீனிவாசம் விருந்தினர் மாளிகை வளாகம், கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும். பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்

டிக்கெட்டுகளை வாங்கும் பக்தர்கள் அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தில் ஏழுமலையானை தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
newstm.in

