Theme Check

பயணிகளுக்கு குட் நியூஸ்.. நவீனமாகிறது எழும்பூர் ரயில் நிலையம்..!

பயணிகளுக்கு குட் நியூஸ்.. நவீனமாகிறது எழும்பூர் ரயில் நிலையம்..!

பயணிகளுக்கு குட் நியூஸ்.. நவீனமாகிறது எழும்பூர் ரயில் நிலையம்..!
X

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 400 கோடி ரூபாய் செலவில் நவீன படுத்தப்பட உள்ளது. பாரம்பரிய கட்டடத்தின் நிலை மாறாமல், அதே வடிவில் நவீன தொழில்நுட்ப வல்லுனர்களால் புதுப்பிக்கப்பட உள்ளது.

நிலையத்தில் பயணியருக்கான வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. ஓய்வறைகள் வசதி அதிகரிக்கப்பட உள்ளது. நடை மேடைகள் புதுப்பித்து அமைக்கப்பட உள்ளன.

பயணியர் நடை மேம்பாலங்களின் தரம் உயர்த்தப்பட உள்ளது. மின் தூக்கி, நகரும் படிக்கட்டு வசதிகள் நடைமேடையின் இரு பகுதிகளிலும் நிறுவப்பட உள்ளன.

இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டப்பட உள்ளது. வடிகால் வசதிகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன. தண்ணீர் தேவைகளுக்கு ஆழ்குழாய் கிணறுகள் நிறுவப்பட உள்ளன.

பூந்தமல்லி சாலை நுழைவு வாயில் பகுதியில் தேவையான கட்டடங்கள் கட்டப்படுவதுடன், நுழைவு வாயிலும் புதிதாக வரவேற்பு வளைவும் அமைக்கப்பட உள்ளன. பார்சல் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்களும் கட்டப்பட உள்ளன.

இந்தத் திட்டத்திற்கு அலுவலக ரீதியான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு ஆண்டுகளில் அனைத்து பணிகளையும் முடித்து பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

Next Story
Share it