குட் நியூஸ்.. தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது..!!

குட் நியூஸ்.. தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது..!!

குட் நியூஸ்.. தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது..!!
X


மன்னர் காலத்தில் ஆண், பெண் என இருவரும் தங்க நகை அணிந்து வந்த நிலையில் தற்போது பெண்கள் அதிகளவில் தங்க ஆபரணங்கள் அணிகின்றனர். ஆண்களும் மோதிரம், சங்கிலி போன்ற நகைகள் அணிவது வழக்கமாக கொண்டுள்ளனர்.

அப்படிப்பட்ட தங்க நகையை வைத்தே, ஒருவரது வசதியின் அளவுகோலாக நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் ஏறுமுகத்தில் இருக்கும் தங்கத்தின் விலை வசதி படைத்தவரைக் கூட, நடுத்தர வர்க்கத்தினராய் மாற்றி விடுகிறது. திருமணத்தின் போது பெண்ணுக்கு நூறு பவுன் நகை கொடுக்க நினைப்பவர்கள் கூட, இன்றைய விலைவாசியில் ஐம்பது பவுன் நகையாய் பேசி முடிக்கின்றனர். தங்கத்தோடு, வெள்ளியும் போட்டி போட்டி கொண்டு விலையேறுகிறது.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,720-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து, ரூ.4,465-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 67,700 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து ரூ.67,400-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:
Next Story
Share it