Theme Check

குட் நியூஸ்.. ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்த தயாராகிறது அரசு!

குட் நியூஸ்.. ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்த தயாராகிறது அரசு!

குட் நியூஸ்.. ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்த தயாராகிறது அரசு!
X

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, 13வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிந்தது. அதற்கு முன்னர், 14வது ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்தி இருக்க வேண்டும். ஒப்பந்த பேச்சு முடிந்திருந்தால், ஊழியர்களுக்கு 2,000 முதல் 5,000 ரூபாய் வரை ஊதிய உயர்வு கிடைத்திருக்கும்.

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. இடைக்கால நிவாரணமாக 1,000 ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக ஆட்சி அமைத்தது. ஆறு மாதங்களாகியும் ஊதிய ஒப்பந்த பேச்சை துவங்காததால், தொழிற்சங்கங்கள் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றன; சிஐடியு தொழிற்சங்கம் போராட்டத்தை துவக்கியுள்ளது.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெருமளவு நீங்கி, பஸ் போக்குவரத்து இயல்பு நிலைக்கு வந்துள்ளது. இந்த நேரத்தில் ஊழியர்கள் ஸ்டிரைக் நடத்தினால் பிரச்னையாகும் என்பதால், ஊதிய ஒப்பந்த பேச்சை துவக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, தொழிலாளர் துறை கமிஷனர், போக்குவரத்து துறை மேலாண் இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. விரைவில், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:
Next Story
Share it