Theme Check

தமிழக மக்களுக்கு நற்செய்தி சொன்ன அமைச்சா்..!

தமிழக மக்களுக்கு நற்செய்தி சொன்ன அமைச்சா்..!

தமிழக மக்களுக்கு நற்செய்தி சொன்ன அமைச்சா்..!
X

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கண்காணிப்பு மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேற்று (16ம் தேதி) ஆய்வு செய்தனா்.

இதைத்தொடா்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கொரோனா சிகிச்சைக்காக தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 91,902 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொற்று அதிகரித்தபோதிலும், மருத்துவமனைகளில் இதுவரை 8, 912 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை, நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் 950 படுக்கைகள் உள்ளன. இதுதவிர, 350 படுக்கைகள் முன்கள பணியாற்றும் அரசு ஊழியர்கள், காவல்துறையினருக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றுக்குள்ளான அனைவரும் மருத்துவமனைகளை நாட வேண்டியதில்லை. லேசான அறிகுறி உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனைக்கு பிறகு தங்களை வீடுகளிலேயே தனிமைப் படுத்திக் கொள்ளலாம். வீடுகளில் உள்ளவர்கள் கண்காணிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலர் சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 100 இடங்களில் கொரோனா சிகிச்சைக்கென சித்த மருத்துவ மையங்கள் அமைக்கப்படவுள்ளன. கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் உயிரிழப்பை தவிர்க்க தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் இறப்பின் விளிம்புக்கு செல்லத் தேவையில்லை. ஒமைக்ரான் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே ஆயுதம் தடுப்பூசிதான் என உணர வேண்டும்.

தமிழகத்தில் 75 சதவீதம் சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மிக குறுகிய காலத்தில் இந்த சாதனையை சாத்தியமாக்கி உள்ளோம். ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக தொற்று பரவல் வேகம் மிகுதியாக குறைந்துள்ளது. பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டுடன் ஊரடங்குக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன” எனக் கூறினார்.

Next Story
Share it