Theme Check

குட் நியூஸ்.. இனி, இரவு 11 மணி வரை மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்..!

குட் நியூஸ்.. இனி, இரவு 11 மணி வரை மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்..!

குட் நியூஸ்.. இனி, இரவு 11 மணி வரை மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்..!
X

சென்னையில் இன்று (17-ம் தேதி) முதல், காலை 5 மணி முதல் இரவு 11 வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இன்று (17-ம் தேதி) முதல் அனைத்து நாட்களிலும் காலை 5 மணி முதல் இரவு 11 வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.

மேலும், வார நாட்களில் (திங்கள் முதல் சனி வரை) நெரிசல் மிகுந்த நேரங்களான காலை 8 முதல் 11 மணி, மாலை 5 முதல் 8 மணி வரை 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில்கள் இரவு 11 மணி வரை இயக்கம்- Dinamani
Next Story
Share it