குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!
குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், ஒரு சில மாநிலங்களில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்திலும் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், விடுமுறை மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த அறிவிப்பு விரைவில் முதல்வர் அலுவலகத்தில் இருந்து வெளியாகும்.
கொரோனா காலத்தில் விடுமுறை அளிக்கப்பட்டதால் பாடங்கள் நடத்தி முடிக்கப்படாமல் இருக்கிறது. எனினும் விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
கொரோனா காலத்தில் பள்ளிகள் இயங்காமல் இருந்ததே மாணவர்களிடையே மோதல்கள் ஏற்பட காரணம். தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்கு மத்திய அரசின் மாணவர்களுக்கான திட்டத்தின் கீழ் மனநல ஆலோசனை வழங்கப்படும்” என்றார்.

