Theme Check

குட் நியூஸ்.. தேர்வெழுதும் மாணவர் பட்டியல்.. திருத்தம் செய்ய அவகாசம்..!

குட் நியூஸ்.. தேர்வெழுதும் மாணவர் பட்டியல்.. திருத்தம் செய்ய அவகாசம்..!

குட் நியூஸ்.. தேர்வெழுதும் மாணவர் பட்டியல்.. திருத்தம் செய்ய அவகாசம்..!
X

பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதும் மாணவர் பட்டியலில் திருத்தம் செய்ய அரசு தேர்வுத்துறை அவகாசம் அளித்துள்ளது.

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர் விவரங்கள் அடங்கிய பட்டியலை, அரசு தேர்வுத் துறையின், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்கள் பயனாளர் அடையாள எண்ணை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யலாம். அதில் ஏதாவது பிழைகள் இருந்தால், வரும் 19-ம் தேதி முதல் 23-ம் தேதிக்குள் திருத்தம் செய்து கொள்ளலாம்.

10-ம் வகுப்பு தேர்வு எழுதிய பின், அரசிதழில் பதிவு செய்து பெயர் மாற்றம் செய்த மாணவர்களுக்கு மட்டும் அரசிதழில் உள்ளவாறு மாற்றம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இந்த பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் அதை சேர்ப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

மாணவர்களின் பயிற்று மொழியில் திருத்தங்கள் இருந்தால் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, வரும் 24-ம் தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள் அனுப்ப வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story
Share it