Theme Check

கோத்தபய அரசே பதவி விலகு.. களமிறங்கினார் கிரிக்கெட் ஜாம்பவான் ஜெயசூர்யா..!

கோத்தபய அரசே பதவி விலகு.. களமிறங்கினார் கிரிக்கெட் ஜாம்பவான் ஜெயசூர்யா..!

கோத்தபய அரசே பதவி விலகு.. களமிறங்கினார் கிரிக்கெட் ஜாம்பவான் ஜெயசூர்யா..!
X

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அதிபர் கோத்தபய தலைமையிலான அரசுக்கு எதிராக இன்று 8 வது நாளாக கொழும்பில் உள்ள காலி முகத்திடல் என்ற இடத்தில் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யாவும் நேற்றைய போராட்டத்தில் மக்களோடு மக்களாக களம் இறங்கினார்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சனத் ஜெயசூர்யாவை தூக்கிப்பிடித்து உற்சாகத்துடன் போராட்டக் குரல் எழுப்பினர். சோர்வின்றி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை ஜெயசூர்யா பாராட்டினார்.
Next Story
Share it