அரசு அதிரடி! 10,11,12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு!!
அரசு அதிரடி! 10,11,12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு!!

கொரோனா பரவல் காரணமாக 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 19ஆம் தேதி நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு 10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வந்தன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி ஜனவரி 31ஆம் தேதி வரை 10, 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதனையடுத்து, வரும் 19 அன்று தொடங்கி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31-ஆம் தேதி வரை ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
newstm.in

