Theme Check

அரசு அதிரடி! பேருந்துகளில் சத்தமாக பேச, பாட்டு கேட்க தடை!!

அரசு அதிரடி! பேருந்துகளில் சத்தமாக பேச, பாட்டு கேட்க தடை!!

அரசு அதிரடி! பேருந்துகளில் சத்தமாக பேச, பாட்டு கேட்க தடை!!
X

பேருந்தில் சத்தமாக பாட்டு கேட்பதால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கர்நாடாகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்றம், பேருந்து நடத்துநர் அதிக ஒலியில் பாடல்களை இசைக்க வேண்டாம் என்றும், சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என்றும் பயணிகளிடம் கேட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் அதை மதிக்காமல் பாடல்களை இசைத்தால் அந்தப் பயணியை பாதி வழியில் இறக்கிவிடலாம் என உத்தரவிட்டது. இச்சூழலில் கேரள அரசு போக்குவரத்துக் கழகமும் இம்மாதிரியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

bus audio 1

பேருந்துகளில் மொபைல் போன்களில் சத்தமாகப் பேசுவது, மின்னணு உபகரணங்களைப் பயன்படுத்துதல் மற்றும் பாடல், வீடியோ காட்சிகளை சத்தமாக பார்ப்பது தடைசெய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

பயணிகளிடமிருந்து தொடர்ச்சியாக வந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. பேருந்துகளில் இவ்வாறு பயணிகள் நடந்துகொள்வதால், சகப் பயணிகள் அசௌகரியமாக உணர்கிறார்கள் என தெரிவித்துள்ளது.

அதனால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கேரளா போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

newstm.in

Next Story
Share it