Theme Check

அரசு அதிரடி உத்தரவு.. அரசு மருத்துவர்கள் கிளினிக் வைக்க தடை !!

அரசு அதிரடி உத்தரவு.. அரசு மருத்துவர்கள் கிளினிக் வைக்க தடை !!

அரசு அதிரடி உத்தரவு.. அரசு மருத்துவர்கள் கிளினிக் வைக்க தடை !!
X

பொதுவாக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் பெரும்பாலான மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும், கிளினிக் முறையிலும் மருத்துவம் பார்த்து வருகின்றனர். இதற்கு தடை விதிக்கவேண்டும் என நீண்ட காலமாகவே கோரிக்கை எழுந்துவருகிறது. அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியம் செய்வதாகவும், அங்கிருந்து தங்களது தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற நேயாளிகளை பரிந்துரைப்பதாகவும் புகார் உள்ளது.

எனினும் எந்த அரசும் தனியார் மருத்துவமனை, கிளினிக் முறையில் மருத்துவம் அளிக்க தடை விதிக்கவில்லை. இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் புதிதாக பணியில் சேர்ந்த மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைக்கக் கூடாது என தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

dr

தெலுங்கானா மருத்துவக் கல்விச் சேவைகள் விதிகளில் திருத்தங்களைச் செய்து, மருத்துவர்களின் கிளினிக் பயிற்சிக்கு முழு தடை விதித்து அரசு உத்தரவு பிறப்பித்தது. இதன்மூலம் பயிற்சி முடித்து பணியில் சேரும் மருத்துவர்கள் முழுமையாக அரசு மருத்துவமனையில் மட்டுமே பணியில் இருக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

அதேநேரத்தில், தெலுங்கானா அரசின் இந்த உத்தரவுக்கு தெலுங்கானா ஜூனியர் டாக்டர் அசோசியேஷன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனினும் அரசு தனது முடிவில் பின்வாங்கவில்லை.

newstm.in

Tags:
Next Story
Share it