Theme Check

அரசு அறிவிப்பு… கொரோனாவால் உயிரிழந்த விவசாயிகளின் கடன் தள்ளுபடி..!

அரசு அறிவிப்பு… கொரோனாவால் உயிரிழந்த விவசாயிகளின் கடன் தள்ளுபடி..!

அரசு அறிவிப்பு… கொரோனாவால் உயிரிழந்த விவசாயிகளின் கடன் தள்ளுபடி..!
X

“கொரோனா தொற்றால் உயிரிழந்த விவசாயிகள் பெற்றுள்ள வேளாண் கடன்களை தள்ளுபடி செய்வதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, கர்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சர் சோமசேகர் கூறியதாவது; “குடும்பத்துக்காக பணிக்கு சென்று சம்பாதித்த தாய், தந்தை உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் தொற்றுக்கு பலியானதால் ஒட்டுமொத்த குடும்பமும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அவர்களுக்கு உதவ, கர்நாடகாவில் பிபிஎல் அட்டைதாரர் (வறுமை கோட்டிற்கு கீழே வாழ்வோருக்கான ரேஷன் அட்டை) குடும்பத்தில் தொற்றுக்கு பலியானோருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் எடியூரப்பா ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் விவசாயிகளும் கூலித் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பலியான விவசாயிகள் பெற்றுள்ள வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. கர்நாடகாவில், 2020 - 2021ம் நிதி ஆண்டில் 25.67 லட்சம் விவசாயிகள் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் ரூ.17 ஆயிரத்து 108 கோடி கடன் வாங்கியுள்ளனர்.

இதில், கடன் பெற்ற விவசாயிகளில் 10,187 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். எனவே, அவர்களின் குடும்பத்தின் நிதிச் சுமையை குறைக்கும் வகையில், இறந்த விவசாயிகள் பெற்ற ரூ.79.47 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது” என அவர் தெரிவித்தார்.
Tags:
Next Story
Share it