5 வயது சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசி- அரசு புதிய அறிவிப்பு !!

5 வயது சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசி- அரசு புதிய அறிவிப்பு !!

5 வயது சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசி- அரசு புதிய அறிவிப்பு !!
X

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து கொரோனா வைரஸ் உருமாறி கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவி வருகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக தடுப்பூசிகளை அனைத்து நாடுகள் அறிமுகம் செய்துள்ளன.

முதலில் பெரியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன்பின் 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி அறிமுகமானது. குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த பல்வேறு நாடுகள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன.

corona

இந்நிலையில் தற்போது பிரிட்டனில் 5 வயது சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரிட்டன் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பிரிட்டனில் வேகமாக பரவும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி செலுத்திகொள்ள தகுதி படைத்தோரின் பட்டியலில், கொரோனா அதிகம் பாதிக்கும் அபாயம் நிறைந்த 5 முதல் 11 வயது சிறார்களும் சோ்க்கப்பட்டுள்ளனா்.

corona

மேலும், சா்க்கரை நோய், நோய் எதிா்ப்பாற்றல் குறைபாடு, கற்றல் குறைபாடு போன்ற உடல்நலக் குறைபாடுகளை கொண்ட சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். இந்த அறிவிப்பின் மூலம், சுமாா் 5 லட்சம் சிறார்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் தகுதியை பெறுகின்றனா், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it