Theme Check

தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் தடை.. அரசு திடீர் உத்தரவு..!

தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் தடை.. அரசு திடீர் உத்தரவு..!

தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் தடை.. அரசு திடீர் உத்தரவு..!
X

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் மறு உத்தரவு வரும் வரை கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூசி பாலிடெக்னிக் கல்லூரி கலை நிகழ்ச்சி--3 - YouTube
தமிழகத்தில், கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தொற்று படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவ - மாணவியருக்கு நேரடி வகுப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர் ஒருவருக்கு கடந்த 6ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மற்ற மாணவர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், மேலும் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, விடுதியில் உள்ள மாணவர்கள் நேரடி வகுப்பில் கலந்து கொள்ளாமல் 14 நாட்கள் ஆன்லைன் மூலமாக வகுப்புகளில் பங்கேற்று வந்தனர்.

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது. கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் கூட்டமாக உணவு அருந்தக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

இளைய தலைமுறையினரை ஈர்க்கும் 'டூடி' பாடல்..!!

Next Story
Share it