Theme Check

மாமண்டூர் பயண வழி உணவகத்தில் அரசுப் பேருந்து நின்று செல்ல தடை.. அமைச்சர் அதிரடி..!

மாமண்டூர் பயண வழி உணவகத்தில் அரசுப் பேருந்து நின்று செல்ல தடை.. அமைச்சர் அதிரடி..!

மாமண்டூர் பயண வழி உணவகத்தில் அரசுப் பேருந்து நின்று செல்ல தடை.. அமைச்சர் அதிரடி..!
X

மாமண்டூர் பயண வழி உணவகம் மற்றும் கடைகளில் உணவின் தரம் குறைவாகவும், விலைகள் அதிகமாகவும் இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், மாமண்டூர் பயண வழி உணவகத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்படுவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட்டுக்கு சொந்தமான ஸ்டார் அசோசியேட்ஸ் சேலம் எனும் ஒப்பந்ததாரர் நடத்தும் மாமண்டூர் பயண வழி உணவகம் மற்றும் கடைகளில் உணவின் தரம் குறைவாகவும், விலைகள் அதிகமாகவும் இருப்பதாக புகார்கள் எழுந்தது.

இந்நிலையில், மாமண்டூர் பயண வழி உணவகத்தில், அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்படுவதாகவும், புதிய தரமான உணவகத்திற்கு அனுமதி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசு பேருந்துகள் நின்று செல்லும் பயண வழி உணவகங்கள் அனைத்திலும் ஆய்வுகள் நடத்தப்படும். தரம் குறைவாகவும், உணவு மற்றும் பொருட்கள் கூடுதல் விலைக்கு வழங்கும் உணவகங்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு, தரமான உணவு மற்றும் குறைந்த விலையில் உணவு வழங்கும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it