Theme Check

திடீரென தீப்பிடித்த அரசு பஸ்.. அதிர்ஷ்டவசமாக தப்பியது 30 உயிர்..!

திடீரென தீப்பிடித்த அரசு பஸ்.. அதிர்ஷ்டவசமாக தப்பியது 30 உயிர்..!

திடீரென தீப்பிடித்த அரசு பஸ்.. அதிர்ஷ்டவசமாக தப்பியது 30 உயிர்..!
X

பெங்களூரு சவுத் எண்ட் சர்க்கிள் பகுதியில் பி.எம்.டி.சி. பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில், அந்த பஸ்சின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியது.

அதை கவனித்த டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். மேலும் பயணிகளை பஸ்சில் இருந்து அவசர அவசரமாக கீழே இறங்கி விட்டார். பயணிகள் அனைவரும் இறங்கிய சிறிது நேரத்தில் அந்த பஸ்சில் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பஸ்சில் தீப்பிடித்தது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து பஸ்சில் பிடித்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். ஆனாலும் பஸ் முழுவதும் எரிந்தது.

இதுகுறித்து பசவனகுடி போக்குவரத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பஸ்களில் உள்ள வயர்களில் ஏற்பட்ட உரசலால் புகை கிளம்பி தீப்பிடித்தது தெரிந்தது. பஸ்சில் புகை வந்ததும் டிரைவர் பயணிகளை கீழே இறங்கியதால் 30 பயணிகளும் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it