Theme Check

இலவச அரிசி வாங்காத ரேஷன் கார்டுகள் ரத்து- அதிரடி காட்டும் அரசு !!

இலவச அரிசி வாங்காத ரேஷன் கார்டுகள் ரத்து- அதிரடி காட்டும் அரசு !!

இலவச அரிசி வாங்காத ரேஷன் கார்டுகள் ரத்து- அதிரடி காட்டும் அரசு !!
X

இலவச அரிசி பெறாத சிவப்பு ரேஷன் அட்டைகளை ரத்து செய்யப்போவதாக புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல்துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் வறுமை கோட்டிற்குகீழ் வாழும் ஏழைகளுக்கான சிவப்பு ரேஷன் அட்டைகளை வசதியானவர்கள் வைத்துள்ளதாக புகார்கள் அதிகளவில் உள்ளன. பல ஏழைகள் சிவப்பு அட்டை கிடைக்காமல் மஞ்சள் நிற அட்டைகள் வைத்துள்ளனர். இதை கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டும் என பலமுறை உறுதி அளித்தும் அதனை செயல்படுத்தவில்லை.

ration card

பல ஏழைகள் சிவப்பு அட்டை கிடைக்காமல் மஞ்சள் நிற அட்டைகள் (வசதி படைத்தவருக்கான உணவு பங்கீட்டூ அட்டை) வைத்துள்ளனர். ஆனால் வசதியானோர் அரிசியை வாங்காமல் இருப்பதை மத்திய அரசு ஒதுக்கீடு மூலம் தெரியவந்துள்ளது.

இதையடுத்து குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குநர் சக்திவேல் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது, புதுச்சேரியில் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா இலவச அரிசி வழங்கும் திட்டத்தில் பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கு அனைத்து சிவப்பு அட்டைத்தாரர்களுக்கும் குடும்ப அட்டையிலுள்ள நபர் ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ வீதம் இலவசமாக அனைத்து பகுதிகளிலும் தரப்படவுள்ளது.

pudhucherry

இந்த இலவச அரிசியை வரும் 20ஆம் தேதிக்குள் பெறவேண்டும். இலவச அரிசி பெறாதவர்களின் சிவப்பு குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும், என்று தெரிவித்துள்ளார்.


newstm.in

Next Story
Share it