Theme Check

திருவிழாவுக்கு சென்ற அரசு ஊழியர்.. வீடு திரும்பியபோது காத்திருந்த அதிர்ச்சி..!

திருவிழாவுக்கு சென்ற அரசு ஊழியர்.. வீடு திரும்பியபோது காத்திருந்த அதிர்ச்சி..!

திருவிழாவுக்கு சென்ற அரசு ஊழியர்.. வீடு திரும்பியபோது காத்திருந்த அதிர்ச்சி..!
X

அரியலூர் மின்நகர் 9-வது குறுக்குத் தெருவில் வசிப்பவர் ராமச்சந்திரன். இவர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அரியலூர் கிளையில் ஸ்டோர் கீப்பராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது சொந்த ஊரான கீழநத்தம் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் சென்றுள்ளார்.

நேற்றிரவு ஊர் திரும்பிய அவர், வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.
அரியலூர்: கோயில் திருவிழாவுக்கு சென்று திரும்பிய அரசு ஊழியருக்கு  காத்திருந்த அதிர்ச்சி | Ariyalur The shock that awaited the civil servant  who went to the temple festival and ...
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், சம்பவம் குறித்து அரியலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பறியும் நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
Share it