Theme Check

அரசு ஊழியர்கள் ஹேப்பி- வெளியாகிறது அறிவிப்பு !

அரசு ஊழியர்கள் ஹேப்பி- வெளியாகிறது அறிவிப்பு !

அரசு ஊழியர்கள் ஹேப்பி- வெளியாகிறது அறிவிப்பு !
X

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்த மாநில அரசு திட்டமிட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 56 ஆக உள்ளது. இதை 57 ஆக அதிகரிக்க கேரள மாநில அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆகவும், சில மாநிலங்களில், 60 ஆகவும் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உம்மண் சாண்டி, 2011 - 16 வரை ஆட்சியில் இருந்த போது, அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 56 ஆக நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்தார். தற்போது வரை இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது.

corona

இந்நிலையில், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 56ல் இருந்து 57 ஆக அதிகரிக்க கேரள மாநில அரசு திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது. இது குறித்த அறிவிப்பு, 2022 - 2023 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் போது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி கே. மோகன்தாஸ் தலைமையிலான கேரள மாநில ஊதியத் திருத்தக் குழு, அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அம்சத்தை ஆய்வு செய்து பரிந்துரைத்தது என்றும், இதை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவை முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கேரள மாநிலத்தில் வேலைக்காக 40 லட்சம் இளைஞர்கள் பதிவு செய்து காத்திருக்கும் நிலையில், இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுமேயானால், இளைஞர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it