Theme Check

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி.. வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி மேலும் குறைப்பு !!

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி.. வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி மேலும் குறைப்பு !!

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி.. வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி மேலும் குறைப்பு !!
X

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கான (இபிஎஃப்) வட்டியை 8.1 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தொழிலாளா் வருவங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) கூறியிருப்பதாவது, கடந்த 2021-22-ஆம் நிதியாண்டுக்கு தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 8.1 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.

money

கடந்த 2020-21-ஆம் ஆண்டுக்கு 8.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அது 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது. 5 கோடி தொழிலாளா்கள் உறுப்பினா்களாக உள்ள இபிஎஃப்ஓ அமைப்பில், கடந்த 1977-78 நிதியாண்டில் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, சுமாா் 40 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்தபட்ச அளவாக 2021-22 நிதியாண்டுக்கு 8.1 சதவீத வட்டி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

money

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம், 2017-18 நிதியாண்டில் 8.55 சதவீதமாகவும், 2016-18-இல் 8.65 சதவீதமாகவும், 2018-19-இல் 8.65 சதவீதமாகவும், 2019-20-இல் 8.5 சதவீதமாகவும் நிா்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மேலும் குறைக்கப்பட்டுள்ளது தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it