Theme Check

அரசு ஊழியர்களுக்கு செக்.. 2ஆவது திருமணம் செய்தால் நடவடிக்கை என எச்சரிக்கை !

அரசு ஊழியர்களுக்கு செக்.. 2ஆவது திருமணம் செய்தால் நடவடிக்கை என எச்சரிக்கை !

அரசு ஊழியர்களுக்கு செக்.. 2ஆவது திருமணம் செய்தால் நடவடிக்கை என எச்சரிக்கை !
X

அரசு ஊழியர்கள் 2ஆவது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது

தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி, பணியில் உள்ள அரசு ஊழியர் முதல் மனைவியோ அல்லது கணவரோ உயிரோடு இருக்கும்போது 2ஆவது திருமணம் செய்யக்கூடாது என்றும், அவ்வாறு 2ஆவது திருமணம் செய்வது ஒழுக்கக்கேடானது என்றும் அரசு மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது, 1973 தமிழக அரசு பணியாளர் சட்ட விதியின்படி, பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மனைவி அல்லது கணவர் உயிருடன் இருக்கும் போது, 2ஆவது திருமணம் செய்தால் அது தண்டனைக்குரிய குற்றம்.

marriage marriage

இதனை மீறி 2வது திருமணம் செய்வோர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர் 2ஆவது திருமணம் செய்வது ஒழுக்கக் கேடானது.அரசு மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல்.

அரசு ஊழியர் 2ஆவது திருமணம் செய்வதால் சட்ட ரீதியாக முதல் மனைவிக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைப்பதில்லை. தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், அவர் பணியிலோ அல்லது விடுப்பிலோ அல்லது அயற்பணியில் இருப்பினும் தமிழக அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளுக்கு உள்பட்டவர்களாவர்.
marriage
எனவே, கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் நிலையில், அவர்கள் செய்துகொள்ளும் மற்றொரு திருமணம் இந்திய தண்டணைச் சட்டம் 494ம் பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றம். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1937இன் படி அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

marriage

முன்னதாக, முதல் மனைவி சம்மதத்துடன் திருமணம் செய்திருந்தாலும், இரண்டாவது மனைவிக்கு அரசு ஊழியரின் பணப்பலன்களை பெற உரிமை கிடையாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it