Theme Check

பிப்.16ஆம் தேதி அரசு விடுமுறை.. பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு! !!

பிப்.16ஆம் தேதி அரசு விடுமுறை.. பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு! !!

பிப்.16ஆம் தேதி அரசு விடுமுறை.. பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு! !!
X

வரும் 16ஆம் தேதி அரசு விடுமுறை அளித்து அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையின் மெய்ஞான மாமேதை மகான் ஷெய்கு பீர்முஹமது சாயுபு ஒலியுல்லா ஆண்டு பெருவிழா வருடந்தோறும் ரஜப் பிறை ஒன்று முதல் 18 வரை நடக்கும். இந்த ஆண்டு இவ்விழா கடந்த இரண்டாம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 1 முதல் 14 வரை மௌலிது ஓதுதல் நிகழ்ச்சி நடக்கும்.

தக்கலை ஷேக் பீர் முகமது சாகிப் வலியுல்லா (ரலி ) ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வருகின்ற 16.02.2022 (புதன் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
kanyakumari
அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

வருகின்ற 16ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்டு இருக்கும் உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2022 பிப்ரவரி நான்காவது நாளான சனிக்கிழமை (26.02.2022) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it