டெல்லி ஏய்ம்ஸ்க்கு இணையாக சென்னையில் அரசு மருத்துவமனை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர் !!
டெல்லி ஏய்ம்ஸ்க்கு இணையாக சென்னையில் அரசு மருத்துவமனை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர் !!

கிண்டியில் உயர்தர பன்னோக்கு மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தொடங்கிவைத்தார்.
இந்திய அளவில் சுகாதாரத்துறையிலும் மருத்துவ கட்டமைப்பிலும் தமிழகம் முன்னோடியாக உள்ளது. தற்போது அடுத்தக்கட்டத்துக்கு செல்லும் வகையில் உயர்தர பன்னோக்கு மருத்துவமனை கட்டப்படுவது கவனத்தை ஈர்த்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் 1,000 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். ரிமோர்ட் மூலம் அதனை தொடங்கிவைத்தார்.

அதாவது, கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் ஏற்கனவே 8 ஏக்கர் நிலப்பரப்பில் மருத்துவமனை உள்ளது. ஆனால் தற்போது மேலும் 4 ஏக்கர் பரப்பில் 6 தளங்களுடன் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட உள்ளது.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிண்டியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக இந்த மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டமைப்பு அமைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
newstm.in

