Theme Check

கேரள அரசின் 2020ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிப்பு !!

கேரள அரசின் 2020ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிப்பு !!

கேரள அரசின் 2020ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிப்பு !!
X

கேரள அரசின் 51 ஆவது திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. “தி கிரேட் இந்தியன் கிச்சன்” சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்படுள்ளது.

மலையாள மொழி திரைப்படங்களுக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு இருக்கும். ஏனெனில் சிறந்த நடிப்பு, கதையம்சம் கொண்டிருக்கும். பெரிய அளவில் செலவும் செய்யப்படாமல் படங்களை தயாரித்து தயாரிப்பாளர்கள் வெற்றிபெறுவர். அண்மைக்காலமாக மலையாள படங்களுக்கு தமிழகத்திலும் மவுசு அதிகரித்து வருகிறது.

sufiyum-sujathayum

இந்த நிலையில், கேரள அரசின் சார்பில் 2020ஆம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 51ஆவது ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆண்டு விருதுகள் குழுவின் தலைவராக சுஹாசினி மணிரத்னம் பணியாற்றி உள்ளார். கொரோனா அச்சுறுத்தலைத் தாண்டியும் இந்த ஆண்டு பல்வேறு விருதுகள் பிரிவுக்கு சுமார் 80 படங்கள் போட்டியிட்டன.

இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட விருதுகள் பட்டியலின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

  • சிறந்த நடிகர்: ஜெயசூர்யா (வெள்ளம்)
  • சிறந்த நடிகை: அன்னா பென் (கப்பேலா)
  • சிறந்த திரைப்படம்: தி கிரேட் இந்தியன் கிச்சன் (இயக்குநர் ஜியோ பேபி)
  • சிறந்த வெகுஜன / பிரபலமான திரைப்படம்: அய்யப்பனும் கோசியும் (இயக்குநர் சச்சி) கலைநயமிக்க திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ayappanum khosim

  • சிறந்த இயக்குநர்: சித்தார்த் சிவா (என்னிவர்)
  • சிறந்த கதாசிரியர்: ஜியோ பேபி
  • சிறந்த அறிமுக இயக்குநர்: முகம்மத் முஸ்தஃப (கப்பேலா)
  • சிறந்த படத்தொகுப்பாளர்: மகேஷ் நாராயணன் (சி யூ ஸூன்)
  • சிறந்த இசையமைப்பாளர்: எம் ஜெயச்சந்திரன் (சூஃபியும் சுஜாதையும்)
  • சிறந்த பாடகர்: ஷபாஸ் அமான்
  • சிறந்த பாடகி: நித்யா மம்மென்
  • சிறந்த பாடலாசிரியர்: அன்வர் அலி
  • சிறந்த கலை இயக்குநர்: சந்தோஷ் ஜான்
  • சிறந்த பின்னணிக் குரல் / டப்பிங் கலைஞர்கள்: ஷோபி திலகன், ரியா சாய்ரா
  • பெண்களுக்கான விசேஷ விருது, திருநங்கை பிரிவு: நான்ஜியம்மா

newstm.in


Tags:
Next Story
Share it