Theme Check

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கியது தமிழக அரசு..!

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கியது தமிழக அரசு..!

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கியது தமிழக அரசு..!
X

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 29 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளனர். கொரோனா தொற்று காரணமாக சிறையில் பல கைதிகள் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், “ஏற்கெனவே பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு சிறையில் தொற்று ஏற்படும் என்பதால், அவருக்கு நீண்ட விடுப்பு வழங்க வேண்டும்” என, அவருடைய தாய் அற்புதம்மாள் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.

இதைத்தொடர்ந்து, பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. இந்நிலையில், பேரறிவாளன் பரோலை மேலும் 30 நாட்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பரோல் முடிந்து பேரறிவாளன் இன்று சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவரது பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 28-ஆம் தேதி புழல் சிறையிலிருந்து பேரறிவாளன் விடுவிக்கப்பட்டு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Next Story
Share it