Theme Check

பட்டியலை தயார் செய்ய குழு அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவு!!

பட்டியலை தயார் செய்ய குழு அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவு!!

பட்டியலை தயார் செய்ய குழு அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவு!!
X

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, கூட்டுறவு வங்கிகளில் 40 கிராமுக்கு கீழ் நகைக் கடன் பெற்றவர்களின் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தவுடன், 40 கிராமுக்கு உட்பட்ட நகைகள் மீதான கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்பது போன்ற நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக் கடன் தள்ளுபடி செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதையடுத்து, போலி நகைகளை வைத்து நகைக்கடன் பெற்றவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் நகை கடன் தொடர்பாக பட்டியல் தயாரிக்க துணை பதிவாளர் தலைமையில் குழு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த குழு தயாரித்த பட்டியலை அந்தந்த கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும் எனவும் அதன் பின்னர் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it