Theme Check

இனி அரசு திட்டங்கள் வேகமாக முடியும்.. அனைத்தையும் தனது கையில் கொண்டுவரும் முதலமைச்சர் !

இனி அரசு திட்டங்கள் வேகமாக முடியும்.. அனைத்தையும் தனது கையில் கொண்டுவரும் முதலமைச்சர் !

இனி அரசு திட்டங்கள் வேகமாக முடியும்.. அனைத்தையும் தனது கையில் கொண்டுவரும் முதலமைச்சர் !
X

அரசின் அலுவல்களை தன் அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்கும் CM dashboard திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்று 7 மாதங்கள் கடந்துள்ள நிலையில், 205-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறுபல திட்டங்களையும் கொண்டுவந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இவற்றில் பலவற்றுக்கு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, தானே நேரடியாக அனைத்து துறை திட்டங்களைக் கண்காணிக்கும் நடவடிக்கையிலும் முதல்வர் இறங்கியுள்ளார். கடந்த செப்டம்பரில் நடந்த துறை செயலர்களுடனான கூட்டத்தில் பேசிய முதல்வர், அனைத்துத் துறைகளின் திட்டங்கள் குறித்த தகவல்களை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் ஆன்லைன் தகவல் பலகையை ஏற்படுத்தி, அதன் மூலம் நான் தினசரி பார்க்கப் போகிறேன். என் அறையிலேயே பார்க்கும் வகையில் ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

வாக்குறுதிகள், வெளியிட்ட அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றம் குறித்த தவகல்கள் அதில் இடம் பெறும். வாரம் ஒருமுறை இதை வைத்து ஆய்வு செய்யப்போகிறேன் என்று கூறியிருந்தார்.

stalin

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, முதல்வருக்கான ’மின்னணு தகவல் பலகை – டேஷ்போர்டு’ (CM dashboard) தயாரிக்கும் பணி தொடங்கியது. ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆலோசகராக உள்ள டேவிதார் நியமிக்கப்பட்டார். வழக்கமான தகவல்கள் போல் அல்லாமல் ஒவ்வொரு துறைகளிலும், திட்டங்கள் தோறும் நிகழ்நிலை புள்ளிவிவரங்கள் கோரப்பட்டு அவை ஒருங்கிணைக்கப்பட்டன. அதாவது திட்டம் தொடங்கப்பட்ட நாள், ஒதுக்கப்பட்ட நிதி, பணி நடைபெறும் நிலை, திட்டத்தின் தற்போதைய நிலைல உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், முதல்வர் விரும்பும் துறையின் தகவல்களை உடனடியாகப் பார்க்க முடியும். இந்த மின்னணு தகவல் பலகைக்கான மென்பொருள் உருவாக்கும் பணியில் 50க்கும் மேற்பட்ட மென்பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு, தற்போது பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த தகவல் பலகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (டிச. 22-ம் தேதி) தொடங்கி வைக்கிறார். இதனால் தமிழகத்தில் இனி அறிவிக்கப்படும் திட்டங்கள் வேகமாக முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், தமிழக முதல்வருக்காக உருவாக்கப்பட்டுள்ள தகவல் பலகையை தற்போது முதல்வர் மட்டுமே பார்க்க இயலும். விரைவில் பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வசதிகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.

newstm.in

Next Story
Share it