Theme Check

இரண்டு அரசு கல்லூரிகளுக்கு கருணாநிதி பெயர் - அரசாணை வெளியீடு !!

இரண்டு அரசு கல்லூரிகளுக்கு கருணாநிதி பெயர் - அரசாணை வெளியீடு !!

இரண்டு அரசு கல்லூரிகளுக்கு கருணாநிதி பெயர் - அரசாணை வெளியீடு !!
X

தமிழகத்தில் உள்ள 2 கல்லூரிகளுக்கு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு மாற்றங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கருணாநிதி முதலமைச்சராக இருந்தப்போது புதிய தலைமைச் செயலகம் பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அதிமுக ஆட்சியில் அது தற்போது அரசு பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.

தற்போது மீண்டும் திமுக அரசு அமைந்துள்ளதால் அவ்வபோது மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகிறது. எனினும் அரசிடம் இருந்து அதுபோன்ற தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக பத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கட்டப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

college

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 2 கல்லூரிகளுக்கு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தின் குளித்தலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு “டாக்டர் கலைஞர்”அரசு கலைக்கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கிவரும் அரசு மகளிர் கலைக் கல்லூரிக்கு “கலைஞர் கருணாநிதி” அரசு மகளிர் கலைக் கல்லூரி எனப் பெயர் சூட்டி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it