Theme Check

8 ஆண்டுகளுக்கு பின் அரசின் வருவாய் பற்றாக்குறை குறைகிறது: நிதியமைச்சர் பட்ஜெட் உரை

8 ஆண்டுகளுக்கு பின் அரசின் வருவாய் பற்றாக்குறை குறைகிறது: நிதியமைச்சர் பட்ஜெட் உரை

8 ஆண்டுகளுக்கு பின் அரசின் வருவாய் பற்றாக்குறை குறைகிறது: நிதியமைச்சர் பட்ஜெட் உரை
X

2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை வரும் ஆண்டில் ரூ.7,000 கோடிக்கும் மேல் குறைகிறது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். 2014 முதல் வருவாய் பற்றாக்குறை அதிகரித்துக்கொண்டே வந்தது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் முதல்முறையாக வருவாய் பற்றாக்குறை குறைகிறது என்று கூறினார்.

மேலும், ஜிஎஸ்டி வந்தபிறகு மாநில அரசின் வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். ஜிஎஸ்டி இழப்பீடு நடைமுறை முடிவுக்கு வந்தபின் 20 ஆயிரம் கோடி வரி இழப்பை தமிழகம் சந்திக்கும். ஜிஎஸ்டி இழப்பீடு நடைமுறையை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என முதலமைச்சர் ஒன்றிய அரசிடம் கேட்டிருக்கிறார் என்று கூறினார்.

முன்னதாக, மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது, வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்தையதை கண்டித்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சரின் பட்ஜெட் உரை முடிந்ததும் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என சபாநாயகர் உறுதி அளித்தபோதும், அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, அதிமுகவினர் கருத்துகள் எதுவும் அவைக்குறிப்பில் சேர்க்கப்படாது என சபாநாயகர் தெரிவித்தார். பட்ஜெட் உரையை கேட்குமாறும் அவர் கோரிக்கை வைத்தார்.

எனினும் ஏற்காத அதிமுக எம்எல்ஏக்கள் பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தொடர்பான உரையை வாசித்து வருகிறார். சில நிமிடங்களில் பல புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.

newstm.in

Next Story
Share it