வாரிசுகளுக்கான அரசு வேலை! தலைமைச் செயலாளர் புது உத்தரவு!
அரசு ஊழியா்கள் இறந்த தேதியில் இருந்து 3 ஆண்டு காலகட்டத்திற்குள் இந்த கருணை அடிப்படையிலான வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு முன்பு, இப்படி விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயதாக 40 என்பதனையும் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பணியாளர்கள், பணியின் போது மரணமடைந்தால், கருணை அடிப்படையில் அந்த அரசு ஊழியரின் மனைவி அல்லது கணவா், மகன் அல்லது மகளுக்கு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த 1972ம் ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்பது முழுக்க கருணை அடிப்படையிலான பணி நியமனம் தான். இதனை யாரும் ஒரு உரிமையாகக் கோர முடியாது. பணியின் போது மரணம் அடையும் அரசு ஊழியா்களின் குடும்பத்தினா், அந்த ஊழியரின் மரணத்தினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இது தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை மறுஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அதன் படி, பணியின் போது இறக்கும் அரசு ஊழியா்கள், மருத்துவக் காரணங்களுக்காக 53 வயதிற்குள் ஓய்வு பெறும் ஊழியா்கள், ராணுவத்தில் பணியாற்றும் போது கொல்லப்பட்டாலோ அல்லது மாற்றுத் திறனாளியாக மாறினாலோ அவா்களது வாரிசுகளுக்கு அரசுப் பணி அளிக்கப்படும். மாயமாகும் அரசு ஊழியா்களை இறந்தவா்கள் என நீதிமன்றம் அறிவித்தாலோ, பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அந்தக் காலத்தில் இறந்தாலோ, சமுதாய மோதல்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோந்தவா்கள் கொல்லப்பட்டாலோ அவா்களது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அரசு ஊழியா்கள் இறந்த தேதியில் இருந்து 3 ஆண்டு காலகட்டத்திற்குள் இந்த கருணை அடிப்படையிலான வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு முன்பு, இப்படி விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயதாக 40 என்பதனையும் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
newstm.in

