தாளாளர், தலைமை ஆசிரியர் பொறுப்பேற்க முடியாது.. பள்ளி நிர்வாகிகள் மீதான வழக்கு ரத்து..!
தாளாளர், தலைமை ஆசிரியர் பொறுப்பேற்க முடியாது.. பள்ளி நிர்வாகிகள் மீதான வழக்கு ரத்து..!

நெல்லையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த டிசம்பர் 17-ம் தேதி கழிப்பறை கட்டடச் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியாகினர்; 4 மாணவர்கள் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் செல்வகுமார், தலைமை ஆசிரியர் எஸ்.பி.பொசிஸ் ஞானசெல்வி, கட்டுமான ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகியோர் மீது திருநெல்வேலி சந்திப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மூவரையும் கைது செய்தனர்.

இந்நிலையில், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி தாளாளர் செல்வகுமார், தலைமையாசிரியர் எஸ்.பி.பொசிஸ் ஞானசெல்வி ஆகியோர் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் விசாரணையில், தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் மீதான வழக்குகளை ரத்து செய்து ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர் ஆகிய இருவரும் இந்த சம்பவம் நிகழ்வதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் பொறுப்பேற்றுள்ளதால் அவர்கள் விபத்துக்கு பொறுப்பேற்க முடியாது என்று கூறி அவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

