Theme Check

யூடியூப் பார்த்து சொகுசு கார்களை திருடிய பட்டதாரி!!

யூடியூப் பார்த்து சொகுசு கார்களை திருடிய பட்டதாரி!!

யூடியூப் பார்த்து சொகுசு கார்களை திருடிய பட்டதாரி!!
X

கர்நாடகாவை சேர்ந்த பி.காம் பட்டதாரி ஒருவர் யூடியூப்- பார்த்து உயர் ரக கார்களை திருடி வந்தது தற்போது தெரியவந்துள்ளது.

கோலார் மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார் (32) ஒரு பி.காம் பட்டதாரி. இவர் அவ்வப்போது திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்படி ஒரு நாள், திருடும்போது, காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து ஆந்திராவில் மதனப்பள்ளி துணைச் சிறையில் அடைத்தனர்.

அப்போது சிறையில் இருந்த அருண்குமாருக்கு, அங்கிருந்த மற்றொரு கைதியான ராகேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ராகேஷும் இவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், ராகேஷ் கார் பூட்டுகளை உடைக்கப் பயன்படும் ஒரு தானியங்கி கருவியைப் பற்றி அருண்குமாருக்கு கற்றுக்கொடுத்துள்ளார்.

car theft2

இதையடுத்து சில நாட்களில் ஜாமீனில் வெளியே வந்த அருண்குமார், ராகேஷ் சொல்லிக்கொடுத்த கருவியை வாங்கி யூடியூப் பார்த்து பயன்படுத்த தொடங்கியுள்ளார். அந்த கருவியை பயன்படுத்தி பெங்களூருவில் கார்களை திருடி வந்துள்ளார்.

அந்த பகுதியில் வாகனங்கள் திருட்டு போவதாக அடிக்கடி புகார் எழுந்த நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அது அருண்குமார் என்று தெரியவந்துள்ளது. உயர் ரக கார்களின் ஸ்டீயரிங் வீலுக்கு அடியில் உள்ள சாதனத்தை இணைத்து, பூட்டைத் திறக்க பயன்படும் சாப்ட்வேரைப் பயன்படுத்தி கார்களை திருடி வந்துள்ளார்.

car theft2

அப்படி திருடிய கார்களை தமிழ்நாடு, ஆந்திரம் என்று பல மாநிலங்களுக்கு எடுத்து சென்று, போலியான பதிவு சான்றிதழ் மூலம் குறைந்த விலைக்கு விற்று வந்துள்ளார். கைது செய்யப்பட்ட அருண்குமாரிடம் இருந்து ரூ.70 லட்சம் மதிப்புள்ள பத்து கார்கள் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அவர் திருடி விற்ற பணத்தை கோவாவிலுள்ள சூதாட்ட விடுதிகளில் செலவழித்து வந்துள்ளார். இணையத்தை பார்த்து உயர் ரக கார்களை திருடி குறைந்த விலையில் விற்று வந்த இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it