யானைகள் மீது பிரம்மாண்ட திருமணம்! என்னமா யோசிக்கறாங்கப்பா...!
யானைகள் மீது பிரம்மாண்ட திருமணம்! என்னமா யோசிக்கறாங்கப்பா...!

தாய்லாந்தை சேர்ந்த ஜோடிகள் காதலர் தினத்தில் யானைகள் மீது அமர்ந்து பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
தற்போது புதுசா புதுசா யோசித்து திருமணம் செய்து கொள்கின்றனர். சமீபத்தில் ஒரு ஜோடி கடலுக்கு அடியில் திருமணம் செய்து கொண்டது இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. அந்த வகையில் தாய்லாந்தில் 59 ஜோடிகள் யானை மீது சவாரி செய்து கொண்டே திருமணம் செய்து கொண்டனர்.

கிழக்கு பாங்காக் மாகாணத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் இந்த திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. திருமண ஜோடியுடன் சேர்ந்து திருமணத்தை பதிவு செய்யும் அதிகாரியும் ஒரு யானையில் அமர்ந்து தம்பதிகள் கையெழுத்திட்டதை மேற்பார்வையிட்டார்.

யானையில் அமர்ந்து திருமணம் செய்யும் இந்த நடைமுறை தாய்லாந்தில் பாரம்பரியமாக இருந்து வருகிறது. வழக்கமாக 100 ஜோடிகள் இந்த திருமணத்தில் பங்கேற்பார்கள். ஆனால் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக குறைந்த அளவிலான ஜோடிகளே வந்திருந்தனர்.

உலக அளவில் கொரோனா பரவல் குறைந்துவிட்டாலும் கூட தாய்லாந்து இன்னும் பொதுமுடக்கத்தை நீக்கவில்லை. அதனால் வெளிநாட்டினர் யாரும் தாய்லாந்துக்கு செல்ல முடியாது.

