மகனின் வளர்ப்பு மகளை கர்ப்பமாக்கிய தாத்தா.. 3 ஆண்டுகளாக நடந்த கொடூரம்
மகனின் வளர்ப்பு மகளை கர்ப்பமாக்கிய உ.. 3 ஆண்டுகளாக நடந்த கொடூரம்

குஜராத்தில் 75 வயதான முதியவரால் சிறுமி மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் பலாத்காரம் செய்த கொடூமை நிகழ்ந்துள்ளது.
கணவரை இழந்த பெண் தனது மைனர் மகளுடன் கணவரின் நண்பரான நிலேஷுடன் வாழ தொடங்கினார். நிலேஷின் தந்தை 75 வயதான முகேஷ் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் மகனின் வளர்ப்பு மகளான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து 3 ஆண்டுகள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்த கொடூமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதுவும் அந்த சிறுமி கப்பமான பிறகு.
உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சிறுமி கர்ப்பமானதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சிறுமியிடம் விசாரித்தபோது தனது வளர்ப்பு தந்தையின் தந்தையான முதியவர் இக்கொடூரத்தை நிகழ்த்தியது தெரியவந்தது. பின்னர் சிறுமியின் தாய் சூரத் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி முதியவரை கைது செய்த போலீசாரை சிறையில் அடைத்தனர்.
newstm.in


