Theme Check

ராணுவத்தில் சேர மூதாட்டி விருப்பம்.. வயதை காரணம் காட்டி உக்ரைன் மறுப்பு..!

ராணுவத்தில் சேர மூதாட்டி விருப்பம்.. வயதை காரணம் காட்டி உக்ரைன் மறுப்பு..!

ராணுவத்தில் சேர மூதாட்டி விருப்பம்.. வயதை காரணம் காட்டி உக்ரைன் மறுப்பு..!
X

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 24வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில், குடிமக்களில் 600 பேர் வரை உயிரிழந்துள்ளனர்; ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என ஐநா மனித உரிமைகளுக்கான தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உக்ரைனைச் சேர்ந்த 98 வயது மூதாட்டி ஒருவர் ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட ராணுவத்தில் சேர முன்வந்துள்ளார். ஓல்ஹா ட்வெர்டோக்லிபோவா என்ற 98 வயது மூதாட்டி ஒரு போர் வீரர் மற்றும் இரண்டாம் உலகப் போரில் தீவிரமாக பங்கேற்றார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீது படையெடுப்பிற்கு உத்தரவிட்ட பிறகு, ஓல்ஹா தனது தாய் நாட்டைப் பாதுகாக்க ராணுவத்தில் சேர முன்வந்தார். அவரது வயது காரணமாக மறுக்கப்பட்டது.

இதுகுறித்து, உக்ரைன் வெளியுறவு அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில், ‘இரண்டாம் உலகப் போரின் வீரரான ஓல்ஹா ட்வெர்டோக்லிபோவா (98) தனது வாழ்க்கையில் 2வது முறையாக போரை எதிர்கொண்டார். அவர் மீண்டும் தனது தாய் நாட்டைப் பாதுகாக்க தயாராக இருந்தார்.

ஆனால், எல்லா தகுதிகளும் அனுபவமும் இருந்தபோதிலும், வயது காரணமாக மறுக்கப்பட்டது. அவர் விரைவில் கியேவில் மற்றொரு வெற்றியைக் கொண்டாடுவார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்’ என பதிவிடப்பட்டுள்ளது.

Next Story
Share it