Theme Check

ஒன்றரை வயது பேத்தியை கொன்ற பாட்டியின் கள்ளக்காதலன்!!

ஒன்றரை வயது பேத்தியை கொன்ற பாட்டியின் கள்ளக்காதலன்!!

ஒன்றரை வயது பேத்தியை கொன்ற பாட்டியின் கள்ளக்காதலன்!!
X

பாட்டியின் கள்ளக்காதலனால் ஒன்றரை வயது பெண் குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சினில் கல்லூர் பகுதியில் உள்ள ஹோட்டலில் 30 வயது மதிக்கத்தக்க ஜான் பெனாயும் அவரது காதலியான 45 வயதுடைய பெண்ணும், பெண்ணின் ஒன்றரை வயது பேத்தியும், 4 வயதான ஆண் குழந்தையுடன் ஓட்டலில் ரூம் எடுத்து தங்கினர்.

ந்நிலையில் பால் குடிக்கும் போது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்ததில் குழந்தை இறந்தது தெரியவந்தது.

குழந்தையின் இறப்பில் சந்தேகித்த மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். அங்கு வந்த போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் இறந்த அக்குழந்தை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

kl 2

அதன்பிறகு ஜான் பெனேயிடமும் அவருடன் இருந்த அந்த பெண்ணிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், கொச்சியைச் சேர்ந்த சஜிஷ் என்பவரின் தாய் தான் அந்த 45 வயது பெண் என்பது தெரியவந்தது.

சஜிஷின் மனைவி வெளிநாட்டில் பணியாற்றுவதால் சஜிஷின் குழந்தைகளை அந்த பெண்தான் கவனித்து வந்துள்ளார். சஜிஷின் தந்தையும் தாயும் பிரிந்து வாழ்வதாகவும், அந்த பெண்ணுக்கும் ஜான் பெனேய்க்கும் பழக்கம் ஏற்பட்டு ஓட்டலில் ரூம் எடுத்து தங்கி வருவதை வழக்கமாக கொண்டிருப்பவர்கள் என்று தெரியவந்தது.

kl 2

அந்த வகையில் சம்பவம் நடந்த அன்று இருவரும் ஒன்றாக இருப்பதற்கு பெண் குழந்தை தொந்தரவாக இருந்ததால் அக்குழந்தையை அறையில் இருந்த தண்ணீர் நிரப்பிய வாளியில் போட்டு ஜான் மூழ்கடிக்கச் செய்திருக்கிறார் என தெரிய வந்திருக்கிறது.

இதனையடுத்து ஜான் பெனெயை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். மேலும் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

newstm.in

Next Story
Share it