Theme Check

ஏப்ரல் 6 முதல் மானிய கோரிக்கை.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!

ஏப்ரல் 6 முதல் மானிய கோரிக்கை.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!

ஏப்ரல் 6 முதல் மானிய கோரிக்கை.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!
X

தமிழக சட்டப்பேரவை வரும் ஏப்ரல் 6-ம் தேதி முதல் மே 10-ம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்கு பின், சபாநாயகர் அப்பாவு வெளியிட்ட அறிவிப்பில், “தமிழக அரசின் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தை ஏப்ரல் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடத்த அலுவல் குழு முடிவு செய்துள்ளது.

அதன்படி, 6-ம் தேதி நீர்வளத்துறை, 7-ம் தேதி நகராட்சி நிர்வாகம், 8-ம் தேதி கூட்டுறவுத்துறை, 11 மற்றும் 12-ம் தேதிகளில் உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை மீதான விவாதங்கள் நடைபெறும்.

உறுப்பினர்கள் கேள்வியும், அமைச்சரவை அமைச்சர்களின் பதிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story
Share it