Theme Check

பெரும் விபத்து தவிர்ப்பு..!! பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்த கண்டெய்னரில் தீ..!!

பெரும் விபத்து தவிர்ப்பு..!! பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்த கண்டெய்னரில் தீ..!!

பெரும் விபத்து தவிர்ப்பு..!! பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்த கண்டெய்னரில் தீ..!!
X

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து லாரிகளுக்கு உதிரிபாகங்களை ஏற்றி கொண்டு கண்டெய்னர் ஒன்று மத்திய பிரதேசம் நோக்கி சென்று கொண்டிருந்தது லாரியை டிரைவர் சித்திக் ஓட்டி வந்தார்.

அப்போது பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் டீசல் போடுவதற்காக கண்டெய்னர் நின்று கொண்டிருந்த போது, திடீரென கண்டெய்னரில் இருந்து புகை வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் கண்டெய்னரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் கண்டெயன்ரில் இருந்து அதிக அளவில் புகை வந்ததால் பூந்தமல்லி தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் கண்டெய்னரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

Next Story
Share it