பெரும் எதிர்பார்ப்பு! இன்று தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்!!
பெரும் எதிர்பார்ப்பு! இன்று தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்!!

2022-23 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது.
2022-23ஆம் நிதியாண்டுக்கான 17ஆவது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கும் நிலையில், கூட்டத் தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 11ஆம் தேதி வரையும், அடுத்த கூட்டம் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் செயல்படும். தொடக்க நாளான இன்று, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.
தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார். நாளை காலை 11 மணிக்கு 2022-23ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை டிஜிட்டல் முறையில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார்.

பிப்ரவரி 2ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும். இறுதியில் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் பிரதமர் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறும்.
உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்த கேள்விகளை பிப்ரவரி 2ஆம் தேதி உறுப்பினர்கள் எழுப்பலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
newstm.in

