Theme Check

பெரும் கொடூரம்... 50 ரூபாய் எடுத்ததற்காக மகனை அடித்துக் கொன்ற தந்தை !!

பெரும் கொடூரம்... 50 ரூபாய் எடுத்ததற்காக மகனை அடித்துக் கொன்ற தந்தை !!

பெரும் கொடூரம்... 50 ரூபாய் எடுத்ததற்காக மகனை அடித்துக் கொன்ற தந்தை !!
X

'பர்சில்' இருந்து 50 ரூபாய் எடுத்ததற்காக 10 வயது மகனை அடித்துக் கொன்ற அவசர புத்திகார தந்தை கைது செய்யப்பட்டார்.

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்வா நகரில் சந்தீப் பிரஜாபதி என்பவர் குடும்பதுடன் வசித்து வருகிறார். இவருக்கு 10 வயதில் மகன், 6 வயதில் மகள் உள்ளனர். இவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். இந்த நிலையில், சம்பவத்தன்று சந்தீப் பிரஜாபதி பர்சில் இருந்து 50 ரூபாய் காணாமல் போனது.

இதனை அறிந்த அவர் கடும் ஆத்திரம் அடைந்து தனது மகன், மகளிடம் கேட்டுள்ளார். அப்போது மகன் தான் 50 ரூபாயை எடுத்தது தெரியவந்தது. இதனால் கடும் கோபம் அடைந்த சந்தீப், தனது மகனை கண்மூடித்தனமாக அடித்துள்ளார். இதில் வலி தாங்காமல் மயங்கி விழுந்த மகனை எழுப்ப முயற்சிக்காமல், போர்வையில் சுருட்டி அப்படியே வைத்து சென்று விட்டார்.

death

ஆனால் இந்த விவகாரம் வெளியே தெரியவந்தது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவல் அடிப்படையில், போலீசார் அந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது போர்வையில் இருந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் சிறுவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், சந்தீப் பிரஜாபதியை கைது செய்தனர்.

50 ரூபாய் எடுத்ததற்காக மகனை தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it