பெரும் பரபரப்பு.. நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுக்க கொலை மிரட்டல் !!
பெரும் பரபரப்பு.. நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுக்க கொலை மிரட்டல் !!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள 2 போட்டிகளிலும் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றிபெற்றுளளது.

இந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிக்கு இடையே 3ஆவது ஒரு நாள் போட்டி தொடர் இன்று நடைபெறஉள்ளது. இதற்காக இருநாட்டு வீராங்கனைகளும் தயாராகி வந்தனர்.
ஆனால். நியூசிலாந்து அணி நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு வந்த மிரட்டல் செய்தியில், அணியினர் தங்கியிருக்கும் ஓட்டலில் வெடிகுண்டு ஒன்று வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, நியூசிலாந்து அணி நாடு திரும்பும்போது அவர்களது விமானத்திலும் வெடிகுண்டு வைக்கப்படும் என மிரட்டல் விடப்பட்டு உள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் தொடர்புடைய மிரட்டல் இ-மெயில் ஒன்றை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் பெற்றுள்ளது. இதனை நியூசிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று உறுதிப்படுத்தி உள்ளது.
இதனையடுத்து நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.எ எனினும் திட்டமிட்டப்படி 3ஆவது ஒருநாள் போட்டி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி நடக்கும் மைதானம், மகளிர் அணியினர் தங்கு விடுதி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
newstm.in

