பெரும் பரபரப்பு... முன்னாள் முதலமைச்சர் மீது கல்வீச்சு !!
பெரும் பரபரப்பு... முன்னாள் முதலமைச்சர் மீது கல்வீச்சு !!

ஆந்திர மாநிலம் திருப்பதி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அங்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் பனபாக லட்சுமியை ஆதரித்து ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று மாலை திருப்பதி ரயில் நிலையம் பகுதிக்கு அவர் பிரச்சாரத்திற்காக வந்தார்.
அப்போது, அங்கு அவர் தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியினர் ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தின்போது நடந்து சென்ற சந்திரபாபு நாயுடு மீது மர்மநபர்கள் திடீரென கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது சந்திபாபுநாயுடு கீழே குனிந்து கல்வீச்சில் இருந்து தப்பித்தார். எனினும் இந்த கல்வீச்சில் தொண்டர் ஒருவர் காயம் அடைந்தார்.

இதனால், சந்திரபாபு நாயுடு தனது கட்சியினருடன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். எனவே அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அந்த கல்லை எடுத்துக்கொண்டு அதனை காண்பித்தவாறு அப்பகுதியில் அவர் பிரச்சாரம் செய்தார்.
அப்போது ஆளும்கட்சியான ஜெயமோகன் ரெட்டி கட்சித்தான் இந்த தாக்குதலுக்கு காரணம் எனவும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி உண்மையை வெளிகொண்டுவரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
newstm.in

