Theme Check

பெரும் பரபரப்பு.. மத்திய அரசின் பத்ம விருதை புறக்கணித்த முன்னாள் முதலமைச்சர்..

பெரும் பரபரப்பு.. மத்திய அரசின் பத்ம விருதை புறக்கணித்த முன்னாள் முதலமைச்சர்..

பெரும் பரபரப்பு.. மத்திய அரசின் பத்ம விருதை புறக்கணித்த முன்னாள் முதலமைச்சர்..
X

மத்திய அரசு அறிவித்த பத்ம விருதுகளை மேற்கு வங்காள முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா உள்பட 3 பேர் புறக்கணித்துள்ளது பெரும் பேசுபொருளாகியுள்ளது.

நாட்டின் 73ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு 2022ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. இதில், மொத்தமாக 107 பத்ம ஸ்ரீ, 4 பத்ம விபூஷன் மற்றும் 17 பத்ம பூஷன் விருதுகள் என 128 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. விருது பெறுபவர்களின் பெயர்களையும் மத்திய அரசு வெளியிட்டது.

மத்திய அரசு அறிவித்த இந்த பத்ம விருதுகள் பட்டியலில், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் 13 பேரும், அடுத்தபடியாக மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் 10 பேரும் பத்ம விருதுகளை பெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த பட்டியலில் தமிழ்நாடு 7 பேருடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

f
இந்த நிலையில், மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அதே மாநிலத்தை சேர்ந்த, பிரபல தபேலா இசைக்கலைஞர் பண்டித் அனிந்தோ சாட்டர்ஜி மற்றும் பிரபல பின்னணி பாடகி சந்தியா முகோபத்தய் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், இவர்கள் 3 பேரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பத்ம விருதுகளை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர். புத்ததேவ் பட்டாச்சார்யா கூறுகையில், எனக்கு பத்ம பூஷண் விருது பற்றி எதுவும் தெரியாது. என்னிடம் யாரும் எதுவும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை அவர்கள் எனக்குக் கொடுத்திருந்தால் நான் அதனை நிராகரிக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுகள் அறிவித்த ஒரே நாளில் இவர்கள் மூவரும் அடுத்தடுத்து புறக்கணித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it