Theme Check

பெரும் பரபரப்பு.. ஒலிம்பிக் வீராங்கனை வீட்டில் குத்தி கொலை !!

பெரும் பரபரப்பு.. ஒலிம்பிக் வீராங்கனை வீட்டில் குத்தி கொலை !!

பெரும் பரபரப்பு.. ஒலிம்பிக் வீராங்கனை வீட்டில் குத்தி கொலை !!
X

ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரரும், இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்றவருமான வீராங்கனை ஆக்னஸ் டிரோப் கொலை செய்யப்பட்டுள்ளது கென்யாவில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்னஸ் டிரோப் அவரது வீட்டில் கூரிய ஆயுதத்தினால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். 25 வயதான ஆக்னஸ் டிரோப் கென்யாவின் மேற்கு நகரமான இட்டனில் உள்ள அவரது வீட்டில் வயிறு மற்றும் கழுத்துப் பகுதிகளில் வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலை அடுத்து போலீசார் அங்கு சென்றனர்.

Agnes Tirop

இதனிடையே, ஆக்னஸ் டிரோப் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது கணவர் தலைமறைவாகியிருந்தார். முதற்கட்ட விசாரணையில் ஆக்னஸ் டிரோப்பின் கணவரால் இந்த கொலை முன்னெடுக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. அதேநேரம் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த வீராங்கனையின் கணவரை நீண்ட தேடுதலுக்கு பிறகு அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Agnes Tirop

ஆக்னஸ் டிரோப், 2017 மற்றும் 2019 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் மகளிர் 10,000 மீட்டரில் வெண்கலப் பதக்கங்களை வென்றார். மேலும் டோக்கியோ ஒலிம்பிக்கில் 5,000 மீட்டரில் நான்காவது இடத்தைப் பிடித்து நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டார். கடந்த மாதம், ஜெர்மனியில் பெண்களுக்கான 10 கிலோமீட்டர் சாலைப் போட்டியில் உலக சாதனையை முறியடித்தார்.


newstm.in

Tags:
Next Story
Share it